தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி சான்றிதழ் வழங்கக்கோரி இருளர் மக்கள் போராட்டம்! - இருளர் மக்கள் சாதி சான்றிதழ்

விழுப்புரம்: சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருளர் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

By

Published : Aug 13, 2020, 10:30 PM IST

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், வானூர் வட்டம் தி.பரங்கனி, திருச்சிற்றம்பலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி இருளர் மாணவர்களுக்கு, சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட் 13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைவாழ் மக்கள் சங்க செயலாளர் சரவணன் தலைமையில், வானூர் அருகே தி.பரங்கனி, திருச்சிற்றம்பலம் பகுதிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் உள்ளிட்ட 165 பேருக்கு பழங்குடி இருளர் இன சாதிச்சான்று வழங்காததை கண்டித்து கோஷமிட்டனர்.

இதனால் விழுப்புரம் தாலுக்கா காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து, விரைந்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாச்சியரிடம் பழங்குடியின மாணவி மனு...!

ABOUT THE AUTHOR

...view details