விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் செயல்படு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் ஒருவர் பச்சிளம் குழந்தையுடன், எந்த அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாமல் மருத்துவமனையின் வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் காட்சி இணையத்தில் வெளியானது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; "உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு என்று ஊரை ஏமாற்றி வருகிறது ஊழல் திமுக அரசு. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவது தொடர்கிறது. தொடர்ந்து துயர சம்பவங்கள் நடந்த பிறகும், அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஊழல் வழக்கில் கைதான அமைச்சருக்குக் கூட தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை வேண்டும் என்று கேட்டதையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் கட்சியினர் நடத்திவரும் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்க, ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளை, பாதாளத்துக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறதா திமுக?" என அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க: சொகுசு காரில் சென்று திருட்டு.. ஆடு, மாடுகள் தான் டார்கெட்.. பலே திருடர்கள் சிக்கியது எப்படி?
இது தொடர்பாக விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு குறிப்பிட்ட அந்த பெண்ணிற்கு படுக்கை வசதி உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து பெண்ணிற்கு சுகாதார முறையில் தனி படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, மரக்காணம் கள்ளச்சார விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக 'ஈடிவி தமிழ்நாடு' கள ஆய்வு மேற்கொண்டதில் குறிப்பிட்ட அப்பெண்ணின் குழந்தை ஆனது காற்றோட்டம் மற்றும் மின்விசிறியின் வேகம் குறைவாக இருந்ததன் காரணமாக குழந்தை அழுததாகவும் அதனால் குழந்தையின் அழுகை நிறுத்துவதற்காக மருத்துவமனையின் வராண்டாவில் குழந்தையை முறையாக மெத்தை விரிப்பில் படுக்க வைத்து அவருடைய பாட்டி விசிறியதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:Keeladi Excavation: சுடுமண் பாம்பு உருவம் - கீழடியில் அடுத்த ஆச்சரியம்!