விழுப்புரம்:விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி நேற்று(ஜூலை 25) கல்லூரி முதல் மாடியில் இருந்து விழுந்துள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் தற்கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாணவி எழுதிய கடிதத்தில் குடும்ப சூழல் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அத்துடன் அவருடைய தாயாரின் வாக்குமூலத்திலும் குடும்ப சூழல் காரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாணவி உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றம் இந்நிலையில் மாணவிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக மாணவி கொண்டு செல்லப்பட்டார்.
உடன் அவரது பெற்றோர்களும் சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:விழுப்புரம் அருகே பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து