விழுப்புரம்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று இரவு (டிச.8)உருவான மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது புயல் தீவிரமடைந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட பிள்ளைசாவடி பகுதியில் கடல் சீற்றமானது 8 முதல் 9 அடிக்கு மிகாமல் உள்ளது.
விழுப்புரம் பகுதியில் முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை - மீனவர்கள் வருத்தம் - மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகரித்துள்ளது
விழுப்புரம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட பிள்ளைசாவடி பகுதியில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புயலின்போது எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமான அளவில் மேற்கொள்ளவில்லை எனவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கடல் அரிப்பினால் 50 வீடுகள் அழிந்துவிட்டன எனவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அரசு அலுவலர்கள் கடமைக்காக மட்டுமே ஆய்வு செய்ய வருவதாகவும், போதிய மின்சாரம் குடி தண்ணீர் இல்லாத காரணத்தினால் தாங்கள் மிகவும் அவதிக்கு உள்ளாவதால் தமிழ்நாடு முதலமைச்சர் இப்பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:மாண்டஸ் புயல்: 15 அடி உயர ராட்சத அலையால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி
TAGGED:
Villupuram fishermen regret