தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்! - delhi farmers attack

விழுப்புரம்: டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை நசுக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று (டிச. 2) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்!
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்!

By

Published : Dec 2, 2020, 6:48 PM IST

பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளையும், விவசாயத்தையும் முற்றிலும் அழிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்ட மசோதா 2020 திரும்ப பெறக்கோரியும், தமிழ்நாட்டில் விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை பாதுகாத்திடவும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை நசுக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விழுப்புரத்தில் இன்று (டிச. 2) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர். கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி. சரவணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்!

மேலும், மக்கள் அதிகாரம், விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க...புரெவி புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வுசெய்த அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details