தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாஞ்சா நூல் பட்டம்!' - காவல் துறை எச்சரிக்கை - Villupuram DSP S. Jayakumar cautioned using Manja thread

விழுப்புரம்: அரசால் தடை செய்யப்பட்டுள்ள மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

'மாஞ்சா நூல் பட்டம்!' - காவல்துறை எச்சரிக்கை
'மாஞ்சா நூல் பட்டம்!' - காவல்துறை எச்சரிக்கை

By

Published : Apr 16, 2020, 10:00 AM IST

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,"கரோனா வைரஸ் தொற்றால் குழந்தைகள் தங்களது வீட்டிலேயே விளையாட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாடியிலிருந்து பட்டம் விட்டு விளையாடுபவர்கள் மாஞ்சா நூலை பயன்படுத்தினால், மேற்படி மாஞ்சா நூல் அரசால் தடை செய்யப்பட்டது. மாஞ்சா நூல் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு தீங்கு ஏற்படுத்தும் என்றும் அறிவுரை கூற வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் எச்சரிக்கை

மேலும், "சமீபத்தில் சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்கண்ணு என்பவர், விழுப்புரம் நகராட்சியில், துப்புரவு பணியை முடித்துவிட்டு கட்பாடி ரயில்வே மேம்பாலம் மீது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அப்பகுதியில் இளைஞர்கள் பட்டம் விட்டதில் மாஞ்சா நூல், அவரின் கழுத்தை சுற்றியது.

இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசால் தடை செய்யப்பட்டுள்ள மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம்விடக் கூடாது. மீறினால் பட்டம் விடுபவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சருக்கும் விஜயபாஸ்கருக்கும் பனிப்போரா?

ABOUT THE AUTHOR

...view details