தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா, கலைஞரிடம் பாராட்டுபெற்ற டி.ஆர்.சேகர் காலமானார்! - திமுக முன்னோடி தலைவர் டி.ஆர்.சேகர் காலமானார்!

விழுப்புரம் : திமுக முன்னோடி தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.சேகர் இன்று (ஆக. 26) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

திமுக முன்னோடி தலைவர் காலமானார்!
திமுக முன்னோடி தலைவர் காலமானார்!

By

Published : Aug 26, 2020, 10:51 AM IST

ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராகவும், விழுப்புரம் மாவட்ட திமுக முன்னோடி தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் டி.ஆர்.சேகர். திமுகவின் சோதனைக் காலமான மிசா காலகட்டத்தின்போது, துடிப்புடன் செயலாற்றியதற்காக பேரறிஞர் அண்ணாவாலும், கலைஞராலும் பாராட்டப்பட்டவர் டி.ஆர்.சேகர்.

உடல்நலக் குறைவால் கடந்த சில தினங்களாக வீட்டிலேயே இருந்து வந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்களும் திமுகவினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து, மாலை நான்கு மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க:ரூ.2,000 தாள்கள் அச்சடிப்பை நிறுத்தியது ஏன்? - ரிசர்வ் வங்கி விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details