மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை திறப்பு விழா விழுப்புரத்தில் ஜன.20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கருணாநிதியின் சிலையை திறந்துவைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இதற்காக திமுகவினர் விழுப்புரம் நகரப் பகுதிகளில் சுவர் விளம்பரங்களை வரைவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கிடையே விழுப்புரம் ரயில் நிலைய மேம்பால சுவரில் அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வாழ்த்து விளம்பரங்கள் இருந்துள்ளன.
நகர திமுக-அதிமுகவினர் இடையே மோதல் அதில் திமுகவினர் நேற்று விளம்பர பேனர்களை ஒட்டியுள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதிமுகவினர், திமுகவினரின் பேனர்களை அகற்றியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திமுகவினர், அதிமுகவினர் செயலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் செய்ய திட்டமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இருதரப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது, இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படாமல் இருக்க சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மெரினாவில் உதவி ஆணையரிடம் வாக்குவாதம் செய்த அதிமுக பிரமுகர்