விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களை மாதம் இருமுறை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டுவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.
காவலர்களை பாராட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்துதல், அண்டை மாநில மதுபாட்டில்கள் கடத்தலை தடுத்தல், தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற செயல்களில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்.
இதில், பெரியதச்சூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், செஞ்சி, வளத்தி, பனையபுரம் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் விழுப்புரம் ஆயுதப்படை காவலர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தனிப்படை காவலர்கள் உள்ளிட்ட 38 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம் அல்ல; குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம்!