விழுப்புரம்மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் முன்னதாக 14 ஒன்றியங்களில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிகண்ட 252 மாணவர்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியியைத்தொடங்கி வைத்துப்பேசிய எஸ்.பி. ஸ்ரீநாதா, 'சதுரங்க விளையாட்டு மனதளவில் நம்மை பலப்படுத்தும் விளையாட்டுகளில் ஒன்று. இப்போட்டியில் பங்கேற்ற அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்' எனத் தெரிவித்தார். இப்போட்டியில் குறைந்தபட்சமாக 5 மற்றும் 6 சுற்றுகள் வைத்து இறுதியில் வெற்றி கண்ட மாணவ மாணவியர்களை, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளார்கள்.