கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள சோழபாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன். விவசாயியான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான கோவிந்தன், குமார், வேடப்பன், தணிகை நாதன் ஆகிய நான்கு பேரால் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
விவசாயி அடித்துக் கொலை - சகோதரர்கள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை - விவசாயி அடித்துக் கொலை
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கூடுதல் நீதிமன்றம்
இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த எட்டு வருடங்களாக நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன், விவசாயி சின்னப்பனை அடித்துக் கொலை செய்த வழக்கில் கோவிந்தன், குமார், வேடப்பன், தணிகை நாதன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும், அந்த நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக மதுபான விற்பனை - பறிமுதல் செய்த தனிப்படையினர்