தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் கரோனா உயிரிழப்பு 46ஆக உயர்வு - விழுப்புரம் கோவிட் 19

விழுப்புரம்: கரோனாவால் முதியவர் ஒருவர் நேற்று (ஆக.11) உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.

corona
corona

By

Published : Aug 12, 2020, 12:16 AM IST

விழுப்புரம் அருகேயுள்ள விராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 87 வயது முதியவர் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:கோவையில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details