விழுப்புரம்: கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் செய்தியாளரிடம் பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஒரு நாளைக்கு 20 முதல் 25 வரை தான் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 1180 இடங்களில் இந்த முகாம் நடைபெறும். பத்தாயிரம் பணியாளர்களைக் கொண்டு இந்த முகாம் நடைபெறுகிறது.
நூறு நாள் வேலைத் தளங்களில் இந்த முகாம் நடைபெறும். கடந்த முறை தடுப்பூசி முதல் முறையாகப் போட்டுக்கொண்டவர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசியும் முறையாகப் போடப்படும்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேட்டி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்களில் உள்ளவர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இதற்கு பொதுமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.