தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கை! - தமிழ்நாடு வானிலை நிலவரம்

தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரவுள்ளதால், கரையோரம் உள்ள 16 கிராம மக்கள் ஆற்றுப் பகுதிக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

வெள்ள  அபாய எச்சரிக்கை
வெள்ள அபாய எச்சரிக்கை

By

Published : Nov 19, 2021, 7:54 AM IST

விழுப்புரம்:கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, பம்பை ஆறு, துரிஞ்சல் ஆறு ஆகிய ஆறுகளிலிருந்து 30 ஆயிரம் கன அடி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, எல்லீஸ்சத்திரம் தடுப்பணை, தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் தடுப்பணை ஆகிய தடுப்பணைகள் வழியாக வங்கக்கடலில் கலக்க உள்ளதால் இன்று (நவம்பர் 19) அதிகாலை தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீர் வரக்கூடும்.

தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கை

எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள 16 கிராம மக்கள் ஆற்றுப் பகுதிக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் விழுப்புரம் நகரில் நேற்று (நவம்பர் 18) மாலை முதல் மிகக் கன மழை பெய்துவருகிறது. இதனால், அதிகாலை 12 மணியளவிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கிடையாது; ஆனால்...' - பாலச்சந்திரன்

ABOUT THE AUTHOR

...view details