நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நாளை (நவ 25) மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் அன்றைய தினம் பொது போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய கடைகள் எதுவும் இயங்காது. மேலும் அன்றைய தினம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.