தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: பிப். 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - விழுப்புரம் நீதிமன்றம்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் விசாரணை முடிவடையாததால் வரும் 24ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம் நீதிமன்றம்

By

Published : Feb 15, 2022, 4:56 PM IST

விழுப்புரம்:பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து விழுப்புரத்திலுள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நீதிமன்றத்தில் இருவர் மீதும் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துறையினர் தாக்கல்செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று (பிப்ரவரி 15) நடைபெறுகிற வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் மூவரும் நேரில் ஆஜராகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்ற அறைக் கதவுகள் மூடப்பட்டு பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் நான்கு மணிநேர குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் முழுமையாக முடிவடையாததால் வழக்கு விசாரணை மீண்டும் வருகிற 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் ஏற்கனவே ஐந்து நாள்கள் குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று ஆறாவது நாளாக குறுக்கு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சர்ச்சையாக வெடித்த ட்வீட்; முன்பிணை கோரிய பாஜக நிர்வாகியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details