தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் முதியவர் கரோனாவால் உயிரிழப்பு - Villupuram Latest News

விழுப்புரம் : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 59 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

Villupuram Corona death toll
Villupuram Corona death toll

By

Published : Jul 14, 2020, 11:48 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1,602 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 993 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள நரையூர் பகுதியைச் சேர்ந்த 59 வயது மதிக்கத்தக்க நபர், அண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் சுகாதாரத் துறை அலுவலர்களின் வழிகாட்டுதல்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வேலூரில் மூவாயிரத்தை தாண்டிய கரோனா - பீதியில் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details