தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விழுப்புரத்தில் ஆயிரத்தை தாண்டிய கரோனா! - Villupuram corona status
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஒரே நாளில் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஜூலை 2 நிலவரப்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 986 ஆக இருந்தது. தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 601 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பரவலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.