தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம், 3 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு! - villupuram corona count reached 3000

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 153 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

By

Published : Jul 25, 2020, 9:17 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜூலை25) ஒரே நாளில் விழுப்புரம் மாவட்டத்தில் 153 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,923 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 1,985 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்குவது மக்களின் எண்ணம்' - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details