தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா! - villupuram corona count

விழுப்புரம்: மாவட்டத்தில் இன்று (ஜூலை 08) ஒரே நாளில் 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,339ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா!
விழுப்புரத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா!

By

Published : Jul 8, 2020, 10:28 PM IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் குறைந்திருந்த கரோனா பாதிப்பு, மீண்டும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 760 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் திண்டிவனத்தில் செயல்பட்டுவரும் தனியார் வங்கியின் மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உடனடியாக ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வங்கி கதவுகள் அடைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details