விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், சட்டத்துக்குப் புறம்பாக கரும்பு கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டத்துக்கு புறம்பாக கரும்பு கொள்முதல்: சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை!
விழுப்புரம்: சட்டத்துக்குப் புறம்பாக கரும்பு கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுவருகிறது. இங்கு இயங்கிவரும் மூன்று கூட்டுறவு, நான்கு தனியார் சர்க்கரை ஆலைகள், பிற மாவட்டத்தில் இயங்கிவரும் கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு இம்மாவட்டத்திலிருந்து கரும்பு சப்ளை செய்யப்படுகிறது.
ஒரு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவுசெய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத கரும்பை வெட்டி வேறு ஆலைக்கு எடுத்துச் செல்வது அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.