தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர போராட்ட தியாகிகளை வீடுதேடி சென்று கவுரவித்த ஆட்சியர்! - honor freedom fighters

விழுப்புரம்: சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற தியாகிகள் குடும்பத்தினரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை இன்று (ஆகஸ்ட் 15) நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

சுதந்திர போராட்ட தியாகிகளை வீடுதேடி சென்று கௌரவித்த ஆட்சியர்!
சுதந்திர போராட்ட தியாகிகளை வீடுதேடி சென்று கௌரவித்த ஆட்சியர்!

By

Published : Aug 15, 2020, 3:19 PM IST

நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து விழுப்புரம் காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து வெள்ளை புறாவையும், மூவர்ண பலூனையும் வானில் பறக்கவிட்டார். பின்னர் கரோனா பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

சுதந்திர போராட்ட தியாகிகளை வீடுதேடி சென்று கௌரவித்த ஆட்சியர்!

இதையடுத்து, சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற தியாகிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். அப்போது கோலியனூர் பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி சுலோச்சனா என்பவர் கரோனா நிவாரண நிதியாக 12 ஆயிரத்து 500 ரூபாயை ஆட்சியரிடம் வழங்கினார். மேலும், சுதந்திர தின நாளில் தனக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க...நம்பிக்கை மனிதி: பூரண சுந்தரி ஐஏஎஸ்...!

ABOUT THE AUTHOR

...view details