இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி படிக்கும் இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேஸ்ட் அண்ட் மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ் வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச்செல்கின்றனர்.
கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல்கள் கிடைக்கிறது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையாக பணி ஒப்பந்தம், என்ன பணி என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்துகொள்ள வேண்டும்.