சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ரகுநாதன் ஜெயபதி என்பவரது இரண்டரை வயது மகள் ஸ்பூர்த்தி தனது உண்டியல் பணத்தை பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி திட்டத்துக்கு அனுப்பியுள்ளார். பிரதமர் தேசிய பேரிடர் திட்டத்துக்கு 2,200 ரூபாயையும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2,220 ரூபாயையும் ஸ்பூர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது தந்தை இணையம் மூலம் அனுப்பியுள்ளார்.