விழுப்புரம்:பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 4) முன்னாள் சிறப்பு டிஜிபி-யின் ஓட்டுனராக பணியாற்றிய காவலர் ராமராஜன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். மேலும் வழக்கு விசாரணைக்கு முன்னாள் டிஜிபி ஆஜரானார். முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆஜராகவில்லை.