கரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் சூழ்நிலையில் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவை மீறியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு - விழுப்புரம் ஊரடங்கு மீறல்
விழுப்புரம் : 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 144 ஊரடங்கு தடை உத்தரவை மீறியதற்காக இன்று மட்டும் 468 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 469 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேற்படி ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் இன்றுவரை மாவட்டத்தில் மொத்தம் 15,170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15,592 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 9,731 இருசக்கர வாகனங்கள், 249 மூன்று சக்கர வாகனங்கள், 284 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.