விழுப்புரம்:மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன். இவரை, அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது 20 பெண்கள் மற்றும் பாமகவினர் 50-க்கும் மேற்பட்டோரை, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த கலிவரதன், "அண்ணாமலையும் வரமாட்டாரு, திருவண்ணாமலையும் வராது. அண்ணாமலை என்ன கடவுளா. உனக்கு நான் கடவுளா, அவர் கடவுளா.
'என் தலைமையில் கட்சியில் சேரச் சொல்லுங்க'
அப்பறம் ஏன் அண்ணாமலையைக் கூப்பிட்டு வா, திருவண்ணாமலையைக் கூப்பிட்டு வான்னு சொல்லிட்டு உட்கார்ந்திருக்கீங்க. என் தலைமையில் கட்சியில் சேரச் சொல்லுங்க.