விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. ஆசிரமத்தில் ஆதரவற்ற பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, அடித்து துன்புறுத்தப்பட்டதாக தெரியவந்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் கோரிக்கை விடுத்தனர். நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், நேற்று(பிப்.26) முதல் விசாரணை நடைபெற்று வந்தது.