விழுப்புரம்:காகுப்பம் சாலையில் அமைந்துள்ள நாவலர் வீதியில் ராஜசேகர் - விஜயா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜலட்சுமி, ஜோதி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் ராமலட்சுமி திருமணமாகி ஊட்டியில் வசித்து வருகிறார்.
இவரின் இரண்டாவது மகளான ஜோதி(21), விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ., வரலாறு முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (பிப்.4) காலை ராஜேசேகர் தனது மனைவி விஜயாவுடன் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த ஜோதி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விழுப்புரம் நகர காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கல்லூரி மாணவி ஜோதியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.