சென்னை:விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆதரவற்றோர் மற்றும் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்டுவதாகவும் பல புகார்கள் வந்தது. இது தொடர்பாக அரசு துறை அதிகாரிகள் மற்றும் கெடார் போலீசார் ஆசிரமத்தில் சோதனை நடத்தி 46 பெண்கள் உட்பட 167 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட பெண்களில் சிலர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்களை அளித்தனர். அதன் பேரில் விழுப்புரம் மாவட்டம் கெடார் காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட ஒன்பது பேரை கெடார் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.