தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வேலை வாங்கி தருவதாக கூறிய நபரை தனிப்படை போலீஸ் கைது! - விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் மோசடி செய்தவரை காவல் துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த ஏழு லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தங்கம்

By

Published : Sep 30, 2019, 9:16 AM IST

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், அதன் சுற்றியுள்ள பகுதிகளான கண்டாச்சிபுரம், சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, மணலூர் பேட்டை ஆகிய பகுதிகளில் சத்துணவு பொறுப்பாளர், சமையலாளர், உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி தங்க நகைகளை பறித்துக்கொண்டு சென்றதாக பல வழக்குகள் இருந்த நிலையில் குற்றவாளியை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் தேடிவந்தனர்.

இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார், குற்றவாளியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் குற்றவாளி திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி செல்வதை செல்ஃபோன் சிக்னல் மூலம் தெரிந்துகொண்டு, மூங்கில்துறைப்பட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வாகன தணிக்கையில் தீவிரமாக காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (52) என்பவரை காவலர்கள் நிறுத்தி விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரிடமிருந்து ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 220 கிராம் (27.5 பவுன்) தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 20 செல்ஃபோன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம், வேலை வாங்கி தருவதற்காக கூறி பலரிடமிருந்து பெற்ற ஆதார் கார்டுகள், மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகை, செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம்

மேலும் படிக்க: வீட்டில் சாராயம் காய்ச்சிய நபர் அதிரடி கைது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details