தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் கரோனா பாதிப்பு கிடு கிடு உயர்வு - மக்கள் அச்சம்

விழுப்புரம் : மாவட்டத்திற்கு கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பியவர்களால் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்துவருகிறது .

villupuram
villupuram

By

Published : May 8, 2020, 1:13 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பிய 400-க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மே 6ஆம் தேதிவரை மொத்தம் 160 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இதைத்தொடர்ந்து, புதிதாக 45 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 205ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விழுப்புரம் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, கோயம்பேடு சந்தையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்குத் திரும்பியவர்கள் திண்டிவனம், கப்பியாம்புலியூர், செஞ்சி, அரசூர் பகுதிகளில் உள்ள தனியார், அரசுக் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டத்தில், கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : விஷ வாயு கசிவுகள் ஓரு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details