விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள புதூர் அருங்குறிக்கை கிராமத்தில் வசித்துவரும் விவசாயி அண்ணாமலை (38). இவர் இன்று தனது மனைவியுடன் வெளியூர் செல்வதற்காக தனது சகோதரி ஜோதி என்பவரது வீட்டில் தமது இருமகள்களான அக்ஷயா(7) மற்றும் ரக்ஷிதா(6) ஆகியோரை விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஜோதியின் வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் அக்ஷாவும் ரக்ஷிதாவும் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் நெடுநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ஜோதியின் கணவர் ஐய்யப்பன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, இருவரும் காணாத நிலையில் அவர்களது ஆடைகள் மட்டும் கரையில் இருந்துள்ளது. இதனால் அச்சம் அடைந்த ஐய்யப்பன் குட்டையில் இறங்கி தேடிய போது இருவரும் சடலமாக இருந்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள குன்னத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.