விழுப்புரம்:திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கிராமம் தென்மங்கலம் காலனி பகுதி இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனபால் என்கிற முதியவர் வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். இந்நிலையில் அவரது உடலை புதைப்பதற்காக அவருடைய உறவினர்கள் ஆற்றைக் கடந்து உடலை ஆபத்தான முறையில் உடலை தூக்கிச் சென்ற அவல நிலை நடந்தேறியுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக தற்பொழுது தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது இதனால் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவானது அதிகம் உள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.