தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நில்... 'என்னை' கவனி... மணலை அள்ளிக்கோ...! - லஞ்சம்

விழுப்புரம்: மணல் அள்ளுவதற்கு முறையாக அனுமதி பெற்றிருந்தும் கிராம உதவியாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bribery

By

Published : Jun 12, 2019, 3:23 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்து உள்ள சின்னமாம்பட்டு ஏரியில் இருந்து தங்கராஜ் என்பவர் தனது வீட்டிற்கு கடகால் போடுவதற்காக துணை வட்டாட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று மணல் அள்ளச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த அக்கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல், கிராம உதவியாளர் உமாவும் மணல் அள்ளுவதற்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து தங்கராஜ் துணை வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று மணல் அள்ளுவதற்கு ஒப்புதல் கடிதங்கள் காட்டினார். அதற்கு அவர்கள் இந்த ஒப்புதல் கடிதத்தை நாங்கள் தான் வாங்கிக் கொடுத்தோம். ஆகையால் பணம் கொடுங்கள் என்று தங்கராஜிடம் இருந்து 500 ரூபாயை கிராம உதவியாளர் உமா லஞ்சமாக பெற்றார்.

கிராம உதவியாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் கிராம நிர்வாக அலுவலருக்கு தனியாக பணம் கொடுத்துவிட்டதாகவும் பதிவாகியுள்ளது.

மணல் அள்ள முறையாக துணை வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றாலும் இதுபோல லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் அந்த அனுமதி கடிதத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்குவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details