தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

விழுப்புரம்: மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

By

Published : Aug 7, 2019, 6:49 PM IST

விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குநர் மகேந்திரன். இவரது அரசு வீடு மட்டும் அவருக்குச் சொந்தமான மூன்று இடங்களில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

மகேந்திரன் அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு வந்த புகாரையடுத்து, இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று சென்னையை அடுத்த சேத்துப்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள அவருக்குச் சொந்தமான மூன்று இடங்களிலும் சோதனை செய்தனர். இந்த சோதனை காலை 7 மணி முதல் நடைபெற்றது இந்த திடீர் சோதனை விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

ABOUT THE AUTHOR

...view details