தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வீட்டில் சோதனை! - கள்ளக்குறிச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை!

By

Published : Jul 26, 2019, 8:40 AM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னசேலம் பகுதியில் வசித்துவருபவர் மருத்துவர் சுப்ரமணியன். இவர் தஞ்சாவூரில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக பணியாற்றிவந்துள்ளார். அப்போது, அவர் ரூ. 10 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் சோதனையிட்டனர். இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details