விழுப்புரம்:கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்தன. அதில் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற பல கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தன. பின், படிப்படியாக தற்போது நோய்த்தொற்றுகள் குறைந்த நிலையில், அனைத்து கரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கி, தமிழ்நாடு அரசு ஏப்.4ஆம் தேதி அறிவித்திருந்தது.
அலட்சியம் காட்டும் ஊழியர்கள்:அதுமட்டுமின்றி மாநில அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு செல்லும் படிப்பறிவு இல்லாத பொதுமக்களையும் வாடிக்கையாளர்களையும் அங்குள்ள அலுவலர்கள் வேண்டாத வெறுப்பாகப் பேசி கடிந்துகொண்டு மனதளவில், பெரிய சாதனையாளர்களைப் போன்று தங்களை பாவித்துக் கொண்டு அங்கு வருபவர்களை அலைக்கழிக்கும் போக்குகளைக் கண்டிருப்போம்.
அந்த வகையில், விழுப்புரத்தில் இது போன்ற அவலங்களின் தாக்கம் இன்னும் தணிந்த பாடில்லை என்பதை சமூக வலைத்தளங்களில் வெளியாகும், இந்த காணொலி நமக்கு உணர்த்துகிறது. விழுப்புரம் நகரில் உள்ள சேக்ரெட் ஹார்ட் கான்வென்ட் பேங்க்(Sacred Heart Convent Indian Bank)-ல் வாடிக்கையாளர்களை அங்குள்ள வங்கி ஊழியர்கள், மரியாதைக் குறைவாக நடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. அங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தினமும் மண்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.