விழுப்புரம் மாவட்ட எல்லையான கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராம எல்லையான விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் மழவந்தாங்கல் ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரை அருகே உள்ள பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில், அடர்ந்த காட்டுக்குள்ளே இருக்கும் மூன்று மலைகளை ஒட்டிய அடிவாரத்தின் அருகாமையில், தனித்த ஒரு பெரிய பாறையின் நடுவில் வேடியப்பன் சிற்பம் அமைந்துள்ளது.
இந்த பகுதியை சுற்றி மழவந்தாங்கல், மலையரசன்குப்பம், புதுப்பாளையம், பில்ராம்பட்டு மற்றும் வேட்டவலம் உள்ளிட்ட கிராம மக்களில் சிலர் காலம் காலமாக மண் குதிரைகள் வைத்து, அவ்வப்போது வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேடியப்பன் சிற்பம் அமைந்திருக்கும் இடத்தை, விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வு செய்துள்ளார்.
செங்குட்டுவன் மேற்கண்ட கள ஆய்வில், இங்குள்ள வேடியப்பன் சிற்பம் கி.பி.15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், “மழவந்தாங்கல் வனப்பகுதியில் தனித்த பாறை ஒன்றில் வேடியப்பன் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.