இந்து பெண்களுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாகக் கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்தும், வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிராக உள்ள மனுநீதி நூலை தடை செய்யக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்துக்கொண்டு மனுநீதி நூலை தடை செய்ய வேண்டும், திருமாவளவன் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.