வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குரு அண்மையில் காலமானதை தொடர்ந்து அந்த பொறுப்புக்கு பு.தா.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர், பனையபுரம், சித்தனி ஆகிய பகுதிகளில் உள்ள இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நினைவிடங்களில் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக கோலியனூர் வந்த வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி க்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை! - Vanniyar Sangam Leader ArulMozhi
விழுப்புரம்: இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் நினைவிடத்தில் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
vanniyar-sangam-new-leader-respects-old-leaders