விழுப்புரம்: விழுப்புரம் அடுத்துள்ள கோலியனூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட கனிமொழி, "10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தத் திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதே தவிர எந்தப் பணியும் அங்கு நடைபெறவில்லை. முதலமைச்சர் பழனிசாமி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அடிக்கல் நாயகன். பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விழுப்புரத்தில் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகத் தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்பதால் வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 23 லட்சம் தமிழ் இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்துவருகின்றனர்.