விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அச்சரம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 20க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியின மக்கள் (பூம் பூம் மாட்டுக்காரர்கள்) கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இதையடுத்து, 2018ஆம் ஆண்டு இவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது.
பழங்குடியின குடியிருப்பை சுற்றி தீண்டாமை வேலி - அகற்றக்கோரி கிராமமக்கள் மனு - Untouchability fence
விழுப்புரம்: வானூர் அருகே பழங்குடியின மக்களின் குடியிருப்பை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை கம்பி வேலியை அப்புறப்படுத்தக் கோரி வட்டாச்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர்.
untouchable_wall
இந்நிலையில், ஆதியன் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்தை சுற்றி தீண்டாமை சுவர்போல கம்பி வேலியை சிலர் அமைத்துள்ளனர். அந்த கம்பியை அகற்ற வலியுறுத்தி வானூர் வட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.