தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் பல்கலைக்கழகம்: அதிமுகவினர் கொண்டாட்டம் - University in Viluppuram

விழுப்புரம்: விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவித்ததையடுத்து, அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் பல்கலைக்கழகம்! அதிமுகவினர் கொண்டாட்டம்
விழுப்புரத்தில் பல்கலைக்கழகம்! அதிமுகவினர் கொண்டாட்டம்

By

Published : Sep 16, 2020, 10:32 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த இரு தினங்களாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் செயல்பட்டுவரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் செயல்படும் என்று அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்கும்விதமாக விழுப்புரம் அதிமுக சார்பில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details