தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண் சடலமாக மீட்பு!

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

suicide

By

Published : Oct 5, 2019, 6:01 PM IST

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகள் அனுஷ்யா. முதுகலைப் பட்டம் பெற்றவரான இவர், சமீபகாலமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் இருந்து அனுஷ்யா மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண் சடலமாக மீட்பு!

இந்நிலையில், இன்று காலை அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பெண் ஒருவரது சடலம் இருப்பதாக கிராம மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற உளுந்தூர்பேட்டை காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டபோது காணாமல் போன அனுஷ்யா என்பது தெரியவந்தது. சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனுஷ்யா இறப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் போலீஸ் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details