கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ளது ஜி.கே. புரம் கிராமம். தொடர்மழை காரணமாக இங்குள்ள தெருக்களில் சாலைகளை மழைநீர் அடித்து சென்றது. இதனால் சாலைகள் தற்போது குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கியுள்ளது. இந்த சாலையை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் அரசு அலுவலர்களிடம் மனு கொடுத்தனர். ஆனால் அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
சொந்த செலவில் மண் சாலை அமைத்த கிராம மக்கள் - மண் சாலை அமைத்த கிராம மக்கள்
கள்ளக்குறிச்சி: அரசு அலுவலர்கள் நடவடிக்கையெடுக்காததையடுத்து பொதுமக்கள் தங்களது செந்த செலவில் மண் சாலை அமைத்துள்ளனர்.
road
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்களது செந்த செலவிலேயே மண் சாலை அமைத்து மற்ற கிராம மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். இது பற்றி தகவலறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அம்மக்களை பாரட்டியுள்ளனர்.