விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட உ.நெமிலி கிராமத்தில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல கிராமங்களில் கிராம உதவியாளர் பணி காலியிடங்களுக்கு ஏழுமலை விண்ணப்பித்து இருந்தும் மாற்றுத்திறனாளியான இவருக்கு வேலை வழங்காமல் மற்றவர்களுக்குப் பணி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஏழுமலைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தகுதியின் அடிப்படையில் பணி வழங்கலாம் என உத்தரவு கடந்த 2011ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இதுவரையில் பணி வழங்கப்படவில்லை.