தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உளுந்தூர்பேட்டை கொலை வழக்கு - 4 பேருக்கு ஆயுள் தண்டனை! - vilupuram latest news

உளுந்தூர்பேட்டை அருகே கொரட்டூர் கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ulundurpet-murder-case
ulundurpet-murder-case

By

Published : Sep 13, 2021, 10:21 PM IST

விழுப்புரம் :கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கொரட்டூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்கிற பெண் உயிரிழந்தார். இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் பக்கிரிசாமி, பாவாடை, கஜேந்திரன், குபேந்திரன் ஆகியோர் காசி என்பவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த காசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து திருநாவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வந்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று(செப்.13) நீதிபதி செங்கமல செல்வன், பக்கிரிசாமி, பாவாடை, கஜேந்திரன், குபேந்திரன் ஆகிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதனை தொடர்ந்து நான்கு பேரும் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க : தேர்வு பயத்தால் கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details