கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விருதாச்சலம் சாலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு கட்டடங்கள் கட்டி 50 ஆண்டுகள் ஆனதால் குடியிருப்பு கட்டங்களின் சுவர்கள் இடிந்து விழுந்து உள்ளன. இதனால் இங்கு வசிப்பவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் குழந்தைகளை வைத்து கொண்டு அவதிபட்டு வருகின்றனர்.
இடிந்து விழுந்த குடியிருப்பு மழைக்காலம் என்பதால் அரசு தற்காலிக இடமாக அரசு சமுதாய கூடங்கள் போன்ற கட்டிங்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள பழைய கட்டங்களை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டங்களை கட்டித்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும் நரிக்குறவர்களும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிக்க: என்னது கடன் குடுக்கமாட்டியா? வங்கியினுள் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர்! சிசிடிவி காட்சிகள்...