தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் மதுபாட்டில்கள் கடத்திவந்த 2 பெண்கள் கைது - விழுப்புரம் மாவட்டச் செய்திகள்

விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களைக் கடத்திவந்த இரண்டு பெண்களைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

villupuram
villupuram

By

Published : Jan 31, 2020, 3:07 PM IST

விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் நகர காவல் துறையினர் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சோதனையின்போது இரண்டு பெண்கள் கையில் கட்டை பைகளுடன் சந்தேகத்திற்கிடமான நின்றுகொண்டிருந்துள்ளனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரிக்கையில் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளனர்.

கடத்திவரப்பட்ட மதுபாட்டில்களுடன் பெண்கள்

சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்கள் வைத்திருந்த கட்டப்பைகளைச் சோதனையிட்டதில் அதில் 320 மதுபாட்டில்கள் இருந்துள்ளன. அவற்றை பறிமுதல்செய்த காவல் துறையினர், விசாரிக்கையில் மதுபாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்திவந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள், திருக்கோவிலூர் ஆயந்தூர் பகுதியைச் சேர்ந்த மேரி, திண்டிவனம் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த வள்ளி என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details